புதன், 31 ஜூலை, 2013

வறுமையின் எல்லைக் கோடு

திட்டக்கமிசன் இந்தியாவில்  கிராமப்புறத்தில் 27க்கு மேலும் நகரங்களில் 33 மேலும் வருவாய் ஈட்டினால் வறுமைக் கோட்டுக் மேலே இருப்பதாக கணக்கிட வேண்டும் என கூறியுள்ளது.

வறுமைக் கோட்டின் எல்லைக் கோட்டை எந்த அடிப்படையில் தீர்மாணித்தார்கள் என்ற விளக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வறுமைக் கோட்டுக்கான எல்லைக் கோட்டை குறிப்பிட்ட ரூபாயாக நிர்ணயிப்பதைவிட தன்னுடைய வருவாயில் எவ்வளவு விழுக்காடு உணவிற்காகவும்,  எவ்வளவு விழுக்காடு மற்ற அத்தியவசியத் தேவைக்காகவும் செலவு செய்கிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சரியாக இருக்கும்.

உதாரணத்திற்கு
பட்டிக்காட்டில் ஒருவரின் மாதவருமானம். (ஆண்டின் சராசரி) 3000.00

3,000.00 100.00%    வருமானம்.
1500.00 -50.00%    உணவிற்கு
500.00 -16.00%    வீட்டுவாடகை
500.00 -16.00%    உடை மற்றும் இதர அத்தியாவசிய செலவினங்கள் 
200.00 -6.66%   போக்குவரத்து
200.00 -6.66%   மருத்துவம்

எனக் கணக்கிட்டால் ஓரளவு கணிக்க இயலும்.

இதில் நகர்ப் புறங்களில் உணவிற்காகும் செலவைக் காட்டிலும் போக்குவரத்து மற்றும் உடைக்கான செலவு அதிகமாக இருக்கும். காரணம் அவரின் பணியின் தன்மையைப் பொருத்து. 

மேலும் ஒருவரின் வருமானத்தை எத்தனை பேர் சார்ந்திருக்கிறார்கள். என்பதைப் பொருத்தும் வறுமைக் கோட்டின் எல்லை மாறுபடும்.

இது போக கடனுக்கான வட்டியும் சேர்க்க வேண்டியுள்ளது  (இந்தியாவில் அனைவரும் கடனானிகளாக மாறிக் கொண்டிருப்பதால்)

5 கருத்துகள்:

 1. திருப்பூரில் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் கணவன் மனைவி வாடகை வீடு என்கிற பட்சத்தில் மாதம் இருவரும் சேர்ந்து 15 000 சம்பாரித்தால் தான் கடன் இல்லாமல் வாழ முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். திருப்பூர் மட்டுமல்ல நகரங்கள் எல்லாவற்றிலும் இந்த நிலை தான் இருக்கும்.

   குழந்தைகளின் கல்விக்கான செலவையும் கணக்கில் கொள்ள வேண்டிவருகிறது. அது கணிசமான அளவிற்கு வந்துவிடுகிறது.

   குழந்தைகளைப் படிக்க வைக்க சிரமபட்டு சம்பாதித்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். ஆனால் அப்படி படிக்க வைக்கப்படும் மாணவர்களில் எத்தனை பேர் நல்ல நிலைக்கு வருகின்றனர் எத்தனை பேர் சிரமபட்டு சம்பாதிக்கும் நிலையிலேயே இருக்கின்றனர் என்பதுதான் கேள்வி

   நீக்கு
 2. சரி. எல்லோரும் இப்படி கருத்து கந்தசாமி, மாணிக்கம் கந்தசாமின்னு பேர் வச்சுக்கிட்டா, அப்புறம் எனக்கு மவுசில்லாமல் போயிடுமே. இதை நான் யாரிடம் சொல்லி அழுகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்காக எங்க இறந்த அப்பா பேர மாத்தவா முடியும்? வேண்டுமென்றால் மா க அப்படீன்னு வச்சுகலாமா?

   நீக்கு
  2. இதுக்காக எங்க இறந்த அப்பா பேர மாத்தவா முடியும்? வேண்டுமென்றால் மா க அப்படீன்னு வச்சுகலாமா?

   நீக்கு