வெள்ளி, 18 ஜூன், 2010

இடம் மாறிய பயங்கரவாதம்

அரசு என்பது நாட்டு மக்களுக்காக நிகழ்கால, எதிர்கால மற்றும் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான திட்டங்கள் தயாரித்து அதை செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அவ்வாறு திட்டங்களையோ சட்டங்களையோ தயாரித்துச் செயல்படுத்தும் போது மக்கள் பாதிப்படையும் போது, அவர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். சனநாயக வழியில் போராடும் போது அதை அரசு கவனித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து திட்டங்களை மாற்றியோ, கைவிட்டோ அட்சியை நடத்த வேண்டும். திட்டங்களை கைவிடுவது என்பது மானப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் மக்களின் முடிவு என்ற மனநிலையில் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாத போது, மக்களின் வாழவாதாரம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் போது அறவழிப் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டமாக உருமாறுகிறது. இப்போர் மக்கள் மீது நடத்தப்படுகிற போது அது பயங்கரவாதம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் தற்காலச் சூழலில் தன்னைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். பண, அடியாட்கள் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றி தான்தோன்றித்தனமாக சட்டங்களையும் திட்டங்களையும் போட்டுக் கொள்கிற ஒரு நிலை தற்போது நிலவுகிறது. இதனால் மக்கள் பாதிப்படையும் போது அவர்கள் அரசுக்கு எதிராக போர்களை நடத்துகிறார்கள். ஆட்சி களவாடியவர்கள் மக்களுக்காகவா திட்டங்களை உருக்குவார்கள்? அவர்கள் தன்னலத்திற்கும் தன் குடும்ப நலத்திற்கும் தேவையான திட்டங்களைத் தான் தீட்டுவார்கள். இத்திட்டங்கள் மக்களின் எதிர்கால, நிகழ்கால மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, கேள்விக்குறியாகத் தான் இருக்கும்.

இவர்கள் ஆட்சியை களவாடியதால் மக்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. அரசுக்கு எதிராக போராடினால் அது பயங்கரவாதம். எனவே மக்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி அடக்கு முறையை கட்டவிழ்த்தப்படுகிறது. உண்மை நிலையை நோக்கினால் மக்களுக்கு எதிராக தற்போதைய அரசுகள் தான் (மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவை அல்ல) பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது. பயங்கரவாதம் என்பது மக்கள் மீது அயுதப் போர் நிகழ்த்துவது. அரசுக்கு எதிராக அயுதப் போர் நடத்துவது அல்ல. இந்தியாவிலாகட்டும், ஈழத்திலாகட்டும் அரசுகளே பயங்கரவாதிகளாக உள்ளன. ஈழத்தில் விடுதலைப் புலிகள் மக்களுக்காக, அரசுக்கு எதிராக போரிட்டனர். தற்போது இந்தியாவில் மாவோஸ்ட்கள் தம் மக்களுக்காக போரிட்டு வருகின்றனர்.

தற்போது இந்தியாவின் ஒட்டு மொத்த அதிகாரமும் சோனியாவிடம் உள்ளது. சோனியாவே இந்தியாவின் பூர்வீகக்குடி மகள் அல்ல. காதல் திருமணம் செய்து பூர்வீக மண்ணை விட்டுவிட்டு வந்தவர். அவரா பூர்வீக மண் என்ற உணர்வைப் பற்றி அறியப் போகிறார்?

பெயரளவு பிரதமரான மன்மோகன் சிங் பொருளாதார நிபுணர். இவருக்கு பொருளாதாரத்தைப் பற்றி மிகத் தெளிவாக துல்லியமாக அறிந்தவர். ஆனால் மக்கள் உணர்வுகளை பற்றி? கர்ம வீரர் காமராசர் கூறியது மக்களுக்காகத் தான் சட்டமே அன்றி சட்டத்திற்காக மக்கள் அல்ல என்று. மக்களுக்காக தான் பொருளாதாரம் மற்றும் சட்டமும். மக்கள் தான் பொருளாதாரத்தை ஆள வேண்டும் ஆனால் இங்கே பொருளாதாரம் மக்களை ஆண்டு கொண்டு இருக்கிறது. இன்றைய பிரதமர் பொருளாதாரத்திற்காக மக்களைக் காவு கொடுக்க துணிந்து விட்டார்கள்.
காரணம் இவர்கள் ஆட்சியை களவாடியவர்கள். ஆக இவர்கள் எப்படி மாவோஸ்ட்டு பிரச்சனைக்கு தீர்வு காண இயலும்? தற்போதைய அரசுகள்தான் பயங்கரவாதியாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. அனைத்து விதமான பேரழிவு ஆயுதங்களையும் கொண்டு, அதைப் பயன்படுத்தும் அதிகாரம் உள்ள பயங்கரவாத அமைப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக